இளைஞர்களுக்கு தற்காப்புக்கலை கற்றுத்தந்த வீடியோவை ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் போது, தான் ஜியு-ஜிட்சு பயிற்சி மேற்கொண்டது மற்றும் இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்தது தொடர்பான காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. தேசிய விளையாட்டு தினத்தை ஒட்டி, இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்க ராகுல்காந்தி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.