காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை 34வது நாளை எட்டியுள்ளது. பீகார் மாநிலம் சசாராம் பகுதிக்கு வந்த ராகுல் காந்திக்கு சாலையின் இருபுறமும் திரண்டு கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். இந்த யாத்திரையில் பீகார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்.ஜே.டி. தலைவருமான தேஜஸ்வி யாதவ் பங்கேற்றுள்ளார்.