யுஜிசியின் புதிய வரைவில், உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர சதி நடக்கிறது என்று, ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
45 மத்தியப் பல்கலைக்கழகங்களில் தோராயமாக 7 ஆயிரம் இடஒதுக்கீட்டுப் பணியிடங்களில், 3 ஆயிரம் காலியாக உள்ளதாகவும், அவற்றில் 7.1% மட்டுமே தலித், 1.6% பழங்குடியினர் மற்றும் 4.5% பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பேராசிரியர்கள் என்று தமது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூட பேசிய பாஜக-ஆர்எஸ்எஸ், இப்போது இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்ப்டட வகுப்பினரின் வேலையைப் பறிக்க நினைக்கின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளார். இதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என்றும், காலியிடங்களை இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த தகுதியானவர்களைக் கொண்டு மட்டுமே நிரப்புவோம் என்றும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.