பிரதமரை கடுமையாக விமர்சித்த ராகுல்காந்தி | RAHUL GANDHI | PM MODI

Update: 2023-10-16 12:42 GMT

3 நாள் பயணமாக மிசோரம் சென்றுள்ள ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சன்மாரியில் இருந்து ஆளுநர் மாளிகை வரை நடைபயணம் மேற்கொண்டு தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்தார். பின்னர் ஐசாவல் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், மணிப்பூர் மாநிலம் என்ற சிந்தனையை பாஜக சிதைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை பிரதமரின் அபத்தமான சிந்தனை என்றும், அதிலிருந்து இன்றளவும் பொருளாதாரம் மீளவில்லை என்றும் ராகுல் விமர்சித்தார். இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றுவது குறித்த பிரதமரின் யுக்தியை, அதானி என்ற ஒற்றை வார்த்தையில் சுருக்கிவிடலாம் என கடுமையாக அவர் விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்