"புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை" மதிமுக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Puducherry | MDMK

Update: 2024-03-07 11:02 GMT

ம.தி.மு.க நிர்வாகக்குழு அவசர கூட்டம், அக்கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து, ஒற்றை அதிகார ஆட்சியை பா.ஜ.க. நடத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் இயங்கி வரும் இந்தியா கூட்டணி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகவும், மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.கவை அகற்ற வேண்டும் என்றும்

தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய வைகோவுக்கு நிர்வாகக் குழு பாராட்டு தெரிவித்தது. புதுச்சேரி சிறுமி பாலியல் மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்