கூடிய முக்கிய பிரமுகர்கள்,, உறுதி செய்த ராகுல் காந்தி.. வெளியான புது தகவல்
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் காங்கிரஸ் தீவிரமாக இறங்கியுள்ளது. ஸ்ரீநகர் சென்ற ராகுல் காந்தி, தேர்தலுக்கு காங்கிரஸ் தயார் நிலையில் இருப்பது மற்றும் கட்சி வியூகம் குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், ராகுல் காந்தியும் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினர். அப்போது முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் உடன் இருந்தார். அப்போது தேர்தலில் காங்கிரசும், தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணியாக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது. தொகுதி பங்கீடு குறித்தும் இரு கட்சி தலைவர்களும் ஆலோசித்தனர்.