த.வெ.க-வின் முதல் மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

Update: 2024-10-04 14:34 GMT
  • த.வெ.க-வின் முதல் மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்
  • தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...
  • த.வெ.க கொடியையும், கட்சி பாடலையும் அறிமுகப்படுத்தி விட்டு, அடுத்ததாக மாநாட்டில் சந்திப்போம் எனக்கூறிய விஜய், மாநாட்டிற்கு இப்போது தொண்டர்களை அழைத்து கடிதம் வெளியிட்டிருப்பதன் மூலம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்...
  • தெறிக்கும் வசனங்களுடன் தொண்டர்களை அழைத்த விஜய்
  • அந்தளவுக்கு உத்வேகமான வசனங்களுடன் விஜய் எழுதியிருக்கும் கடிதம் த.வெ.க தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது...
  • தொண்டர்களை குஷிப்படுத்தும் வகையில் அன்பான வார்த்தைகளையும், நிர்வாகிகளை வீறு கொண்டு எழச்செய்யும் அளவுக்கு உத்வேகத்தையும், த.வெக கட்சியின் எதிர்காலம் குறித்து விமர்சித்தவர்களுக்கு பதிலடியும் கொடுத்து... தன் அரசியல் பயணத்தில் வேறொரு முகத்தை காட்டியிருக்கிறார் விஜய்..
  • என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே என கடிதத்தில் ஆரம்பித்த விஜய்... உங்களை நானும், என்னை நீங்களும் நினைக்காத நாளில்லை எனவும், ஏன்? நிமிடங்கள் கூட இல்லை என்றும் உருகியிருக்கிறார்...
  • கூடவே, தன் பாணியில் குட்டி ஸ்டோரி ஒன்றையும் கடிதத்தில் சொல்லியிருக்கிறார் விஜய..
  • பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும் என்றும், பொறுப்பான குடிமகனைத்தான் நாடு போற்றும் என்றும் குறிப்பிட்ட விஜய், அதிலும் முன்னுதாரணமான மனிதனைத்தான் மக்கள் போற்றுவார் என்றும் கூறி, இம்மூன்றுமாக நாம் இருக்க வேண்டுமென தொண்டர்களுக்கு அன்பாக அறிவுரை சொல்லியிருக்கிறார்..
  • மேலும், மாநாட்டுக்கான பணிகள் தொடங்கிய நிலையில், நாம் ராணுவ கட்டுபாட்டுடன் இயங்கி, அதனை நாட்டு மக்களுக்கு உணர வைக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்..
  • கூடவே, மாநாட்டில் உற்சாகம் இருக்கலாம், கொண்டாட்டம் இருக்கலாம், குதூகலம் இருக்கலாம்.. ஆனால் ஓரிடத்தில் கூடினால் பக்குவத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்...
  • தொடர்ந்து, நம் கட்சி, சாதாரண கட்சி இல்லை என்றும், ஆற்றல் மிக்க பெரும்படை, இளஞ்சிங்கப் படை, சிங்கப்பெண்களின் படையுடன், குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை எனக்கூறி ரசிகர்களை உத்வேகப்படுத்தியிருக்கிறார்..
  • அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? என விமர்சனம் செய்தவர்களுக்கு இந்த மாநாடு மூலம் நாம் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்...
  • விழுப்புரம், விக்கிரவாண்டியின் வி.சாலை என்னும் வெற்றி சாலையில் சந்திப்போம் என விஜய் தெரிவித்திருக்கிறார்..
  • இந்நிலையில், அக்டோபர் 27தான் தங்களின் தீபாவளி எனக்கூறி த.வெ.க தொண்டர்கள் உற்சாகமடைந்து, மாநாட்டுக்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்...
  • மாநாடு வாயிலாக பதில் கொடுப்போம் - விஜய்
  • "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே... உங்களை நானும், என்னை நீங்களும் நினைக்காத நாளில்லை, ஏன்?.. நிமிடங்கள் கூட இல்லை"
  • "பொறுப்பான மனிதனாகவும், நாடு மதிக்கும் குடிமகனாகவும், மக்கள் போற்றும் முன்னுதாரணமான மனிதனாகவும் நாம் இருக்க வேண்டும்"
  • "மாநாட்டுக்கான பணிகள் தொடங்கிய நிலையில், நாம் ராணுவ கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டும்"
  • "மாநாட்டில் உற்சாகம் இருக்கலாம், கொண்டாட்டம் இருக்கலாம், குதூகலம் இருக்கலாம்.. கூடவே, பக்குவத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும்"
  • "நம் கட்சி, ஆற்றல் மிக்க பெரும்படை, இளஞ்சிங்கப் படை, சிங்கப்பெண்களின் படையுடன், குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை"
  • "அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? என விமர்சனம் செய்தவர்களுக்கு இந்த மாநாடு மூலம் பதிலடி"
Tags:    

மேலும் செய்திகள்