"அடுத்த பிரதமர்" - யாரை சொன்னார் ராகுல் காந்தி? | Modi | Rahul gandhi

Update: 2024-08-25 06:51 GMT

ஜாதிவாரி கணக்கெடுப்பை பிரதமர் மோடி நடைமுறைப்படுத்த வேண்டுமென, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்...உத்தரபிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியல் சாசன மரியாதை கூட்டத்தில், எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நாட்டின் பெரிய தொழிலதிபர்களாக இருக்கும் 500 பேரில், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரை காண முடியவில்லை எனக் குறிப்பிட்டார். மேலும், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது வெறும் கணக்கல்ல, அது நமக்கான கொள்கைக் கட்டமைப்பு எனத் தெரிவித்தார். குறிப்பாக, ஜாதிவாரி கணக்கெடுப்பை பிரதமர் மோடி நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும், இல்லையெனில் அடுத்த பிரதமர் வந்து கணக்கெடுப்பை நடத்துவதை மோடி பார்க்க வேண்டுமெனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்