அன்று பெரியார்... இன்று மோடியா..? "அட நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!" - சத்யராஜ் சூசகம்

Update: 2024-05-18 11:35 GMT

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், இந்த தகவல் தனக்கு புது செய்தியாக இருப்பதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாகவும், அதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாகவும் சமூக வலை தளங்களில் செய்தி வெளியாகி வந்தன. அம்பேத்கர் மற்றும் பெரியார் கொள்கைகளை பின்பற்றுபவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நடிகர் சத்யராஜ், பிரதமர் மோடியாக நடிக்கிறார் என்ற தகவல் இணையத்தில் பேசு பொருளானது. கடந்த 2007ல் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சம்பளம் பெறாமல் நடித்திருந்ததை சுட்டிக்காட்டியும் இந்த தகவல் வைரலானது. இதுகுறித்து நடிகர் சத்யராஜிடம் கேட்ட போது, தனக்கு இது புது செய்தியாக இருப்பதாக அவர் தெரிவித்ததோடு, நாத்திக கருத்துகளை அதிகம் பேசும் எம்.ஆர்.ராதா ஆன்மீகவாதியாக நடித்துள்ளார், ஆகையால் பொறுத்திருந்து பார்ப்போம் என சூசகமாக பதிலளித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்