வலிமை, பாசம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளம் அம்மா எனக் கூறி ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் தாய்க்கு பிரதமர் மோடி உணர்வுப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளார்.
ஜமைக்கா பிரதமருக்கு பிரதமர் மோடி அளித்த விருந்தில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவும் கலந்து கொண்டார். அப்போது, தனது தாய் செய்து கொடுத்த சுர்மா உணவை பிரதமர் மோடிக்கு நீரஜ் சோப்ரா வழங்கினார்.
சுர்மா எனப்படுவது வட மாநிலங்களில் கோதுமை மாவு, சர்க்கரை, நெய்யை கொண்டு செய்யப்படும் பதார்த்தமாகும்...
இந்த உணவை சாப்பிட்ட பிரதமர் மோடி, நீரஜ் சோப்ராவின் தாய் சரோஜ் தேவிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அதில், நீங்கள் செய்து கொடுத்த உணவு, தனது தாயை நினைவூட்டியதாக நெகிழ்ந்துள்ளார்.
நவராத்திரி பண்டிகைக்கு முன்பு அம்மாவிடமிருந்து இந்தப் பிரசாதம் கிடைத்தது தற்செயல் நிகழ்வல்ல என்றும், ஒருவகையில் இந்த சுர்மா,, நோன்புக்கு முன் எனது முக்கிய உணவாகிவிட்டதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.