கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அமலாக்கத்துறையால் சுமார் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமலாக்கத்துறையின் செயல்பாடு குறித்து அதில் உரையாற்றினார். அவர் கூறுகையில், 2014-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை 5 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை மட்டுமே முடக்கி வைத்திருந்ததாக கூறினார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருப்பதாக அவர் கூறினார். அதேபோல், கடந்த 10 ஆண்டுகளில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட வழக்குகள் மற்றும் புகார்களின் எண்ணிக்கையும் 10 மடங்கு அதிகரித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதன் மூலம் வெளிப்படைத்தன்மையுடன் முன்னேற்ற பாதையில் இந்தியா செல்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.