"உயிருடன் விளையாடுவதா..? யார் தவறு செய்தாலும்..." - ஈபிஎஸ் காட்டம்

Update: 2023-08-15 11:22 GMT

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகர்கோவிலை சேர்ந்த 3 வயது ஆண் குழந்தைக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில், வெறிநாய் கடிக்கான மருத்துவ சிகிச்சை அளித்து குழந்தை இறந்துவிட்டதாக கூறிய நிலையில், கேரளாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை தற்போது நல்ல நிலையில் இருப்பதாக பெற்றோர் கூறியதாக செய்திகள் வந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நோய்த்தன்மை குறித்து பரிசோதிக்காமல், கவனக்குறைவாக கையில் கிடைத்த மருந்தை நோயாளிகளுக்கு செலுத்துவது மிகவும் கொடுமையானதாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தவறுகளை யார் செய்தாலும், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்