நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டப்பேரவை தேர்தலும் நடக்கும் ஒடிசாவில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, மாநிலத்தில் பாஜகவின் இரட்டை என்ஜின் அரசு அமையும் என கூறினார். ஒடியா மொழியையும், கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ளும் மண்ணின் மகன் அல்லது மகள் பாஜக அரசின் முதல்வராக்கப்படுவார் என்றார். ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளத்தில் தமிழகத்தை சேர்ந்த வி.கே. பாண்டியன் முக்கிய பொறுப்போடு பிரசாரம் செய்யும் வேளையில், அவரை வெளிநபர் என பாஜக பிரசாரம் செய்து வருகிறது. இப்போது பிரதமர் மோடியும் அவரை மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார் என்றே பேசப்படுகிறது.