நெல்லை மேயர் பதவியேற்பு விழாவை புறக்கணித்த இரண்டு திமுக நிர்வாகிகள்

Update: 2024-08-10 13:55 GMT

நெல்லை மாநகராட்சியின் மேயர் பதவியேற்பு விழா குறித்து பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தரப்பிலிருந்து, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநகர நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு நெல்லை மாநகர தி.மு.க. செயலாளர் சுப்ரமணியம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், மேயர் பதவியேற்பு விழாவில், மாநகர செயலாளர் சுப்பிரமணியமும், மாவட்ட பொறுப்பாளரும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், எதிர் வேட்பாளர் பவுல்ராஜ், புதிய மேயருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சால்வை அணிவித்தார். மேலும் ஒரு பதாகை ஒன்றையும் வழங்கினார். அதில், நான் மேயரானால் என்ற வாசகம் தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில் இதர 54 மாவட்ட உறுப்பினர்களின் திட்டங்களை கேட்டு, வார்டு தேவைகளை பூர்த்தி செய்து, நெல்லை மாநகராட்சியை முன்மாதிரியான மாநகராட்சியாக செயல்படுத்திட மேயருக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்