எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு | ADMK

Update: 2024-07-28 05:03 GMT

நில மோசடி வழக்கில் காவல் ஆய்வாளர் பிரித்விராஜை வரும் 31ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை வைத்து மோசடியாக பதிவு செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி கைது செய்தது. இந்த வழக்கில், நிலத்தின் அசல் ஆவணங்கள் தொலைந்து விட்டதாக கூறி போலி சான்று வழங்கியதாக கைதான வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜை சிபிசிஐடி போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், விசாரணை முடிந்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்க கரூர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்