அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனு - நீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-07-19 04:18 GMT

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமின் மனு மீதான விசாரணை, 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 16-ஆம் தேதி கைது செய்தனர். கேரள மாநிலம், திருச்சூரில் கைது செய்யப்பட்ட அவரை, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, 15 நாள்கள் நீதிமன்ற காவலில் இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜாமின் கோரி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதில் அதிமுக தரப்பு வழக்கறிஞர் மற்றும் சிபிசிஐடி தரப்பு வழக்கறிஞர் ஆகியோரது வாதங்களை கேட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்