"இந்தியாவிற்கு பெருமை சேருங்கள்.." - ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு மோடி சொன்ன அறிவுரை
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26ம் தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி வீரர்கள் நீரஜ் சோப்ரா, பி.வி.சிந்து உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது, இந்த முறையும் இந்தியாவுக்கு விளையாட்டு வீரர்கள் பெருமை சேர்ப்பார்கள் என நம்புவதாகவும், டெல்லி செங்கோட்டையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் ஒலிம்பிக் வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார். வீரர்கள் தங்களின் திறமை மற்றும் பயிற்சியின் மீது முழு நம்பிக்கை கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, நேர்மறை எண்ணங்களுடன் கவனமாக இருந்தால் நிச்சயம் வெற்றி காண முடியும் எனத் தெரிவித்தார்.