பிரதமர் மோடியை சந்திப்பதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மாலை டெல்லி புறப்படுகிறார்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தங்குகிறார். வரும் 27ஆம் தேதி காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். அப்போது, தமிழக நலன் சார்ந்த திட்டங் களுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்துவதோடு, விரிவான கோரிக்கை மனு ஒன்றையும் பிரதமரிடம் வழங்க உள்ளார். குறிப்பாக, சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும் பிரதமரிடம் நேரில் வலியுறுத்த உள்ளார். சந்திப்பு முடிந்ததும் அன்றைய தினம் மாலையே முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். அதன் பிறகு வரும் 28ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் 9 ஆயிரம் கோடியில் அமைய இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.