"பொய் சொன்னாரா கே.பி.முனுசாமி.. எல்லாத்துக்கு காரணம் அவரோட பினாமியா?" -போட்டு தாக்கிய திமுக நிர்வாகி

Update: 2024-07-25 07:59 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் சாலை பிரச்சினையில், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும், திமுக நிர்வாகியும் பரஸ்பரம் குற்றம் சாட்டி உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சீக்கனப்பள்ளி கிராமத்தில் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட சாலையை, திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ், ஜேசிபி கொண்டு சேதப்படுவதாக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள நாகேஷ், எந்த குடியிருப்பும் இல்லாத பகுதிக்கு சாலை எதற்காக என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அங்குள்ள பார்ம் ஹவுஸ் நிர்வாகத்துடன் இருந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் சாலை தோண்டப்பட்டதாகவும், கே.பி.முனுசாமியின் பினாமியாக இந்த பார்ம் செயல்படுவதாகவும் நாகேஷ் குற்றம்சாட்டினார்.

-

Tags:    

மேலும் செய்திகள்