"தகுதியானவர்களுக்கு மட்டுமே பணி" - பள்ளி கல்வித் துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் உள்ள வழிமுறைகளின்படி, தகுதியான ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

Update: 2022-07-02 08:04 GMT

"தகுதியானவர்களுக்கு மட்டுமே பணி" - பள்ளி கல்வித் துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் உள்ள வழிமுறைகளின்படி, தகுதியான ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணிப்பேட்டையைச் சேர்ந்த ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2ம் நிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தும் பணி வழங்கப்படவில்லை என்றும், தற்போது, பள்ளி நிர்வாக குழு மூலம் ஆசிரியர் நியமனம் செய்வது இயற்கை விதிகளுக்கு முரணாணது என்றும் கூறியிருந்தார். அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், கல்வி பெறும் உரிமை சட்டத்தின் வழிகாட்டுதல்களின் படி தகுதியானவர்களுக்கு மட்டும் தான் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும், வழக்கு தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஜூலை 7 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்