நாடாளுமன்றத் தேர்தல், மாநிலங்களின் தேர்தல்களை எதிர்கொள்வதற்காக, அகில இந்திய காங்கிரஸ் 16 பேர் கொண்ட புதிய குழுவை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இருந்த குழுவில் 11 பேர் இருந்த நிலையில், உறுப்பினர்களின் எண்ணிகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், ஏ.கே.ஆண்டனி, வீரப்ப மொய்லி, கிரிஜா வியாஸ், ஜனார்த்தன் திவேதி, முகுல் வாஷ்னிக், மோசினா கித்வாய் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குழு, வேட்பாளர் பட்டிலை விவாதித்து முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.