அனைத்து அதிமுக MLA-க்களும் சஸ்பெண்ட்.. பெருங்கோபத்தில் ஈபிஎஸ் எடுத்த கடின முடிவு

Update: 2024-06-27 02:51 GMT

நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து நேர்மையான விவாதம் மறுக்கப்பட்டு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அடிப்படை ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மடைமாற்ற அரசியலால் கடந்துவிட முயற்சிக்கும் திமுக அரசிற்கு கடும் கண்டனம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரியும் தனது தலைமையில்

அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் மேற்கொள்ளவுள்ளோம் என்றும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்