திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை பகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கே.ஜி.ரமேஷ் ஆகஸ்ட் 15 அன்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இன்று காக்கங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட திருவுருவ படத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து, மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினார். அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். கே.ஜி.ரமேஷ் குடும்பத்தினருக்கு அவர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.