ஈபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த ரெய்டு - வெளியான தகவல்

Update: 2024-10-26 10:04 GMT

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நண்பர், இளங்கோவனுக்கு சொந்தமான கல்லூரிகளில்

4 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை, இன்று காலை முடிவடைந்தது.

சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான எம்ஐடி பாலிடெக்னிக், வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் எம்ஐடி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி, ஆகிய இரண்டு இடங்களிலும் கடந்த 22-ந் தேதி காலை முதல் சுமார் 10 - க்கும் மேற்பட்ட வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கடந்த 4 நாட்களாக கல்லூரியில் தங்கி தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று காலை சோதனை முடிவடைந்து, காரில் புறப்பட்டு சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்