"ED, IT - பாஜகவின் ஆயுதமாக செயல்படுகிறது"

Update: 2023-11-04 14:09 GMT

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பா.ஜ.க. ஆயுதமாக பயன்படுத்துவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் குற்றம் சாட்டியுள்ளார்.

சூதாட்ட செயலியின் விளம்பரதாரர்கள், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு 508 கோடி ரூபாய் கொடுத்ததாகவும், இது விசாரணைக்கு உரியது என்று அமலாக்கத்துறை கூறியிருப்பதாகவும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், இது பிரதமரின் தெளிவான சதி என்றும், பூபேஷ் பாகலுக்கும், காங்கிரஸ் அரசுக்கும் களங்கம் ஏற்படுத்த பா.ஜ.க. முயல்வதாகவும் குற்றம் சாட்டினார். ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரின் வீட்டு வாசலிலும் மத்திய அரசின் அமைப்புகள் சோதனை நடத்துவதாகவும்,

சத்தீஸ்கர் மக்கள் தகுந்த பதிலை வழங்குவார்கள் என்றும் குறிப்பிட்டார். எங்கெல்லாம் தேர்தல் நடைபெறுகிறதோ, அங்கே அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவற்றை, பா.ஜ.க ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்