"சட்டத்து-ல கூடாதுனு சொல்லிருக்கா... எழுதிக் கொடுங்க?" - எச்சரித்த போலீஸ்- எகிறிய பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக நிகழ்ச்சியில் பரபரப்பு
பொள்ளாச்சி அருகே ஆச்சிப் பட்டியில் வரும் 20ம் தேதி மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்காக பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இன்று பலூன்கள் பறக்க விட தயாரான நிலையில், அனுமதி பெறாமல் பலூன்களைப் பறக்க விடக்கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்தனர். அப்போது அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசிடம் அனுமதி கடிதம் எழுதிக் கொடுக்குமாறு அதிமுக நிர்வாகிகளிடம் கூறிவிட்டு, எம்.எல்.ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமனும், தாமோதரனும் அங்கேயே காத்திருந்தனர்.