டெல்லியில் குவிந்த தமிழ்நாடு வழக்கறிஞர்கள்.. தலைநகரில் வெடித்த ஆர்ப்பாட்டம் | Delhi | Thanthitv
மத்திய அரசு அமல்படுத்திய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு மற்ற புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். இதில் தமிழக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பங்கேற்றுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், இந்த மூன்று குற்றவியல் சட்டங்கள் சாமானிய, அடித்தட்டு மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் என்றார். நிலுவையில் உள்ள வழக்குகள் அதிகரிக்கும் என்றும், வழக்கறிஞர்கள் சட்டங்களை புரிந்து கொளவதற்கு சிரமமாக இருக்கும் என்றார்.