"பிரதமர் மோடிக்கு தடை..!" - பரபரப்பை கிளப்பிய மனு... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதமர் மோடியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தீபக் குமார் என்ற விமானி தாக்கல் செய்த மனுவில், 2018-ஆம் ஆண்டு தான் இயக்கிய ஏர் இந்தியா விமானத்தை விபத்துக்குள்ளாக்க திட்டமிட்டதாகவும், இது தொடர்பான விசாரணைக்கு பிரதமர் உள்ளிட்டோர் முட்டுக்கட்டை போட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதனால், பிரதமர் மோடி, அமித்ஷா, ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரின் வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தீய நோக்கத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.