நாடாளுமன்றத்தில் யார் பிரதமராக இருந்தாலும், உங்களுக்காக குரல் கொடுப்பேன் என கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். சூலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், மத்தியில் இருந்த பாஜக அரசும், மாநிலத்தில் இருக்கும் திமுக அரசும் தமிழகத்திற்காக எதுவும் செய்யவில்லை என விமர்சித்தார்.