முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இன்று தஞ்சைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாநகராட்சி அரங்கில், திராவிடர் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடம், சுற்றுலா மாளிகை, தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி ட்ரோன்கள் பறக்க விடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.