சென்னையில் இன்று நடைபெற்ற, தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரசமைப்புச் சட்டத்தில் பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டுமென்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில், 13 பேர் கொண்ட குழு, மாநில கல்விக் கொள்கையை உருவாக்கி, முதலமைச்சரிடம் வழங்கியிருந்தது. மாநில கல்விக் கொள்கை குழு, முதலமைச்சரிடம் வழங்கிய மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய பாஜக அரசு, 2020இல் அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுத்து, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.