சிவகாசி வட்டார தொழிலதிபர்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துரையாடினார். சிவகாசி சட்டமன்ற தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட அவர், சிவகாசி வட்டார பட்டாசு, தீப்பெட்டி, அச்சு மற்றும் அதன் சார்பு தொழில் நிறுவனங்களின் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, சிறு, குறுந்தொழில்களுக்கு மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும் என்று கூறினார். சிவகாசி வட்டார தொழில்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளதையும் தாண்டி உதவி செய்ய வேண்டிய கட்டாயத்தில் மத்திய பாஜக அரசு உள்ளது என்றும், தொழில் முனைவோரின் நம்பிக்கையை இழக்கும்படி தங்கள் செயல்பாடு இருக்காது என்றும் கூறினார்.