மேட்டூர் அணையிலிருந்து, 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்துவிட்டு 6,276 கன அடி தண்ணீரே திறந்து விடப்பட்டுள்ளதால்
கடைமடை வரை, தண்ணீர் சென்றடையுமா ? என்பது கேள்விக்குறியாகி இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதனால் அறிவித்தபடி, 12,000 கன அடி தண்ணீரைத் திறந்து விடுவதோடு, மேற்கு மற்றும் கிழக்கு கால்வாயிலும் தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என அவர் திமுக அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.