வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலனின் கைதுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் சென்னையில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசிய புகாரில் கபிலன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவினரை முடக்குவதில் முதல்வர் தீவிரமாக இருப்பதாக கூறி விமர்சித்திருக்கிறார்.