"சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கும் போது... காலரை தூக்கிவிடலாம்" - அண்ணாமலை பேச்சு

Update: 2023-08-21 02:51 GMT

திமுகவினருக்கு மலையை பார்த்தாலும் பிடிக்காது, அண்ணாமலையை பார்த்தாலும் பிடிக்காது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நெல்லை வள்ளியூரில் என் மண் என் மக்கள் பயணத்தை தொண்டர்கள் புடைசூழ தொடர்ந்து வரும் அண்ணாமலை, திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். நடைபயணத்தை தொடர்ந்த அண்ணாமலைக்கு மலர் தூவி தொண்டர்கள் வரவேற்பளித்த நிலையில், சிலர் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். வள்ளியூர் புதிய பேருந்து நிலையப் பகுதியில் நடைபயணத்தை முடித்த அவர், பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது, திமுகவினருக்கு மலையை பார்த்தாலும் பிடிக்காது, அண்ணாமலையையும் பிடிக்காது என கூறினார். தொடர்ந்து, சந்திராயன் 3 விண்கலத்தை சுமந்து சென்ற ராக்கெட்டின் கிரையோஜனிக் எஞ்சின் மகேந்திரகிரியில் தயாரிக்கப்பட்டது என்பது பெருமைக்குரிய விஷயம் என கூறிய அவர், லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது வள்ளியூர் மக்கள் காலரை தூக்கிவிடலாம் என தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்