தி.மு.க முப்பெரும் விழா, வீண் விளம்பரத்துக்கு எடுக்கப்படும் விழா என, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழக பா.ஜ.க சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில், பத்தில் ஒரு பங்கை தி.மு.க அரசு நிறைவேற்ற முன்வந்தாலே, கோவையின் பல ஆண்டு கால ஏக்கம் தீரும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், அதை விடுத்து விழா எடுப்பதனால், மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.