செப்டம்பர் 1 முதல் காத்திருக்கும் அதிர்ச்சி - "பெரும் அநீதி" என கொந்தளிப்பு

Update: 2024-08-26 09:24 GMT

கட்டணத்தை உயர்த்துவது பெரும் அநீதி என, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்கத் தவறும் நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதற்கு, தார்மீக ரீதியில் எந்த உரிமையும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்றும், அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்