தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு திருப்பதிக்கு செல்லும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை காலை ஏழுமலையானை வழிபட உள்ளார். அமித்ஷா வருகையை முன்னிட்டு, அவர் பயணம் செய்ய இருக்கும் வழித்தடங்கள், தங்க உள்ள விருந்தினர் மாளிகை, ஏழுமலையான் கோயில் வளாகங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர். சாதாரண உடை அணிந்த போலீசார் பக்தர்கள் கூடும் அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.