ஒரே நாடு ஒரே தேர்தல் கைவிடப்படுமா? - மோடியின் 3வது ஆட்சி ஆரம்பித்த 100வது நாளில் அமித்ஷா அறிவிப்பு
நடப்பு ஆட்சி காலத்திலேயே ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான 3 ஆவது அரசு, 100 நாட்களைள் நிறைவு செய்ததையொட்டி செய்தியாளர்களிடம் அமித்ஷா, வக்ஃபு சொத்துக்கள் பராமரிப்பு, பாதுகாப்பு, அவற்றை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு மசோதா வழிசெய்கிறது, வரும் நாட்களிலேயே நாடாளுமன்றத்தில் வக்ஃபு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்றார். நடப்பு ஆட்சி காலத்திலேயே ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். மணிப்பூரில் கலவரம் நீடிப்பது குறித்த கேள்விக்கு, பிரச்சினைக்கு மூல காரணத்திற்கு தீர்வு காண, இந்தியா - மியான்மர் எல்லையில் வேலி அமைக்கும் பணிகளை தொடங்கியிருப்பதாக தெரிவித்தார். இந்தியா - மியான்மர் இடையே மக்கள் நடமாட்டத்தை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாகவும், விசா மூலம் மட்டுமே இந்தியாவுக்குள் நுழைய முடியும் என தெரிவித்தார். மணிப்பூரில் அமைதியை கொண்டுவர இருதரப்பு மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.