ஜெகன் மோகன் கட்சியிலிருந்து திடீரென விலகிய அம்பத்தி ராயுடு..! காரணம் இதுவா..? | Ambati Rayudu
அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகியதற்கான காரணத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு வெளியிட்டுள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த ராயுடு, அடுத்த சில நாட்களிலேயே அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், துபாயில் நடைபெறும் ஐ.எல்.டி20 தொடரில் தான் பங்கேற்க இருப்பதாகவும், அதனால் அரசியல் தொடர்பில் இருக்கக் கூடாது என்பதால் அரசியலில் இருந்து இப்போது விலகியுள்ளதாகவும் ராயுடு விளக்கம் அளித்துள்ளார்