143 பொருட்களின் ஜிஎஸ்டி வரி உயர்வு? - காங்கிரஸ் விமர்சனம்
அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது, பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது, பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. மாநில நிதி அமைச்சர்களை கொண்ட ஜிஎஸ்டி வரி சீராய்வு குழு, 143 பொருட்கள் மீதான வரியை உயர்த்த பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது மக்களை வஞ்சிக்கும் செயல் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி குற்றம்சாட்டியுள்ளார். ஜிஎஸ்டி வரி உயர்வு, நாட்டில் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.