சிறையில் இருந்தே வெற்றி - அசத்தி காட்டிய அசம் கான் !

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் கவனம் ஈர்த்த வெற்றி தோல்விகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

Update: 2022-03-11 07:49 GMT
உத்தரபிரதேசத்தில் கொலைக்குற்றத்துக்காக சிறையில் இருந்தபடியே, ராம்பூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட சமாஜ்வாடி மூத்த தலைவரான அசம்கான் பாஜக வேட்பாளர் ஆகாஷ் சக்சேனாவை விட 54,862 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியை தன் வசப்படுத்தி இருக்கிறார். இவர் ராம்பூர் மக்களவை தொகுதியின் எம்.பி.யும் கூட! பாலியல் வன்முறைக்கு ஆளான உன்னாவ் சிறுமியின் தாய் ஆஷா சிங்கை வேட்பாளராக களமிறக்கியது காங்கிரஸ் கட்சி. ஆனால் உன்னாவ் தொகுதியில் போட்டியிட்ட அவருக்கு சொற்ப வாக்குகள் கிடைக்கவே, தோல்வியை தழுவினார். விவசாயிகள் போராட்டத்தின் போது வன்முறை நிகழ்ந்த லக்கிம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் யோகேஷ் வர்மா 20 ஆயிரத்து 578 வாக்குகள் வித்தியாசத்திலும், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தியோபந்த் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரிஜேஷ் சிங் ராவத் 7 ஆயிரத்து 104 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். பெண் காவல் அதிகாரியாக இருந்து, ஜனதா தளத்தில் இணைந்து, மணிப்பூரின் Yaiskul தொகுதியில் களம் கண்ட Thounaojam Brinda மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் 4,574 வாக்குகள் மட்டும் பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். கோவா மாநிலம் பனாஜி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கரை எதிர்த்து களம்கண்ட பா.ஜ.க வேட்பாளர் Atanasio Monserrate 716 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இதேபோல அவரது மனைவி Jeniffer Monserrate, Taleigao தொகுதியில் 2041 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதே போல பா.ஜ.க வேட்பாளர் Vishwajit Rane, Valpoi தொகுதியிலும், அவரது மனைவி Deviya Vishwajit Poriem தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்