சமோசா முதல் பி.எம்.டபிள்யூ வரை... - உ.பி தேர்தல் செலவுக் கணக்கு பரபரப்பு...

உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்களுக்கான செலவின பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சமோசா முதல் கார் வாடகை வரை... வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம் என விவரிக்கிறது இந்த செய்திக்குறிப்பு...

Update: 2022-01-20 08:08 GMT
உத்தரபிரதேச மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. பிரசாரத்தில் வேட்பாளர்கள் செலவு உச்சவரம்பை 25 லட்சத்தில் இருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது தேர்தல்ஆணையம். இந்த சூழலில், லக்னோவில் வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் என விலையை நிர்ணயம் செய்து பட்டியலை வெளியிட்டுள்ளார் மாவட்ட தேர்தல் அதிகாரி. அதன்படி, சமோசா மற்றும் தேநீர் விலை 6 ரூபாய் எனவும், 4 பூரி மற்றும் இனிப்புடன் கூடிய ஒரு பிளேட் காலை உணவு 37 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படும் மலர் மாலை ஒரு மீட்டர் 16 ரூபாய் எனவும், 3 டிரம்ஸ்கள் கொண்ட இசைக் கருவிகளுக்கு ஒருநாள் வாடகை 1,575 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்படும் BMW, மெர்சிடிஸ் போன்ற சொகுசு கார்களுக்கு ஒருநாள் வாடகை 21 ஆயிரம் ரூபாய் எனவும் Innova, fortuner போன்ற கார்களுக்கு ஒருநாள் வாடகை 2,310 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படி மொத்தம் 66 வகையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வாடகை மற்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்யும் வகையில், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்