பாஜக எம்.பி.க்கள் கூட்டம்-அமித்ஷா, நட்டா பங்கேற்பு

பாஜக எம்.பி.க்கள் கூட்டம்-அமித்ஷா, நட்டா பங்கேற்பு

Update: 2021-12-21 15:08 GMT
வாஜ்பாய் பிறந்த தினத்தை, நல்ல நிர்வாகத்திற்காக நாளாக கொண்டாட வேண்டும் என ஜே.பி.நட்டா கூறியதாக அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில், அமித்ஷா, ஜே.பி. நட்டா, மூத்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்றனர். இதில், பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களவையில் நிறைவேறிய தேர்தல் விதிகள் திருத்த மசோதாவின் பயன் மற்றும் அவசியம் குறித்து எம்.பி.க்களுக்கு விளக்கினார். பின்னர் பேசிய நட்டா, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த தினமான டிசம்பர்-25ஐ,  நல்ல நிர்வாகத் தினமாக பா.ஜ.க. எம்.பி.க்கள் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தினார் என மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்