இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Update: 2020-10-31 10:10 GMT
குஜராத் மாநிலம் கெவாடியாவில் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் ஏறி பிரதமர் மோடி பயணம் செய்தார். இதன் மூலம் கெவாடியாவில் இருந்து சபர்மதி ஆற்றங்கரை இடையிலான பயண தூரம் 4 மணியில் இருந்து 45 நிமிடங்களாக குறையும் எனக் கூறப்படுகிறது. 14 பயணிகள் வரை சுமந்து செல்லும் வகையிலான பிரிவு 2பி வகை மிதவை விமானங்கள், தினமும் எட்டு தடவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வணிக ரீதியிலான முதல் கடல் விமான சேவை இந்தியாவுக்கு புது சகாப்தம் என அனைவராலும் பாராட்டப்படுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்