பா.ஜ.க. அரசின் தவறான நடவடிக்கையால் பின்தங்கும் இந்தியா - நரேந்திர மோடி அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பிரதமர் நரேந்திர மோடியால் ஏற்படுத்தப்பட்டு உள்ள செயற்கை பேரழிவுகளால் நாடு தொடர்ந்து உலகளவில் பின்தங்கி வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியால் ஏற்படுத்தப்பட்டு உள்ள செயற்கை பேரழிவுகளால் நாடு தொடர்ந்து உலகளவில் பின்தங்கி வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் வரலாறு காணாத வகையில் நாட்டின் நிகர உள்நாட்டு உற்பத்தி சுருங்கி உள்ளதாகவும் 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து 12 கோடி பேர் வேலை இழந்து உள்ளதாகவும் ராகுல்காந்தி சுட்டிக்காட்டி உள்ளார். மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. தொகையினை, மத்திய அரசு தராமல் இருப்பதையும் ராகுல்காந்தி குறைகூறியுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். எல்லைகளில் தொடர்ந்து அண்டை நாடுகளால் ஏற்பட்டு வரும் பதற்ற நிலையை கட்டுப்படுத்துவதிலும் அரசு தோல்வியடைந்து விட்டதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.