"புதிய இந்தியாவை உருவாக்குவதில் மாற்றுத்திறனானிகளின் பங்கு அவசியம்" - பிரதமர் மோடி

புதிய இந்தியாவை உருவாக்குவதில் மாற்றுத்திறனானிகளின் பங்கு அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-29 10:29 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது சேவை, விளையாட்டு உள்ளிட்ட எந்த துறையாக இருந்தாலும் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பாஜகவின்  6 ஆண்டு கால ஆட்சியில் சுமார் 9 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட  முகாம்  நடைபெற்றதாகவும் அவர் கூறினார். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற முகாம்களை எளிதில் காண முடியாது என்றும் மோடி தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்