குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பிரசாரம் - மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி வீடு வீடாக சென்று விளக்கம்
புதுச்சேரியில், மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி, பொதுமக்களின் காலில் விழுந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு கேட்டார்.
புதுச்சேரியில், மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி, பொதுமக்களின் காலில் விழுந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு கேட்டார். லாஸ்பேட்டை பகுதியில் உள்ள குறிஞ்சி நகரில் வீடு வீடாக சென்று, அவர் துண்டு பிரசுரம் வழங்கி விளக்கினார்.
அப்போது அவரை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஒரு பெண்ணின் காலில்விழுந்த அமைச்சர் சுரேஷ் அங்காடி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு கோரினார்.