பிரக்யா தாகூர் எம்.பி.,க்கு மாணவர்கள் எதிர்ப்பு - மாகன்லால் சதுர்வேதி பல்கலைக் கழகத்தில் பரபரப்பு

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கல்லூரி மாணவிகளை சந்திக்கச் சென்ற பாஜக பெண் எம்.பி. பிரக்யா தாகூருக்கு கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-26 02:06 GMT
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கல்லூரி மாணவிகளை சந்திக்கச் சென்ற பாஜக பெண் எம்.பி. பிரக்யா தாகூருக்கு கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள மாகன்லால் சதுர்வேதி ஊடகவியல் தேசிய பல்கலைக்கழகத்தில்  வருகைப் பதிவு தொடர்பாக இரண்டு மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சந்திப்பதற்காக பிரக்யா சிங் தாகூர் சென்றபோது அங்கிருந்த காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தன்னை ஒரு பெண் எம்.பி. என்றும் பாராமல் அவமரியாதை செய்ததாகவும் கோஷமிட்ட அனைவரும் தீவிரவாதிகள் என்றும் கூறினார். தனக்கு  எதிராக போராடிய மாணவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் பிரக்யா தாகூர் கூறினார். ஏற்கனவே இரு தினங்களுக்கு முன் விமானத்தில் இருக்கை தொடர்பாக பயணியுடன் பிரக்யா தாகூர் வாக்குவாதம் செய்தது குறிப்பிடத்தக்கது


Tags:    

மேலும் செய்திகள்