காங். பிரமுகர் சந்திரசேகர் கொலை வழக்கு - 3 பேர் சரண்
புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக குற்றவாளிகள் அவரை பின் தொடர்ந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் சுகன்,காணுவாய்பேட்டை அப்துல் நசீர், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த புளியங்கோட்டை என்கிற ரங்கராஜ் ஆகியோர் சரணடைந்தனர். இவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சந்திரசேகர் தனது மனைவி உடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவர்களை இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அது தற்போது வெளியாகி உள்ளது.